மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

Added : ஜூன் 23, 2022 | |
Advertisement
சென்னை,:'சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்புக்காக அமைக்கப்படும், 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி, இரண்டு மாதங்களில் முடிவடையும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி கல்வி துறையில், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, 1.15 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.மாணவியர் பாதுகாப்புக்காக, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில்,

சென்னை,:'சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்புக்காக அமைக்கப்படும், 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி, இரண்டு மாதங்களில் முடிவடையும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி கல்வி துறையில், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, 1.15 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.மாணவியர் பாதுகாப்புக்காக, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும் என, பட்ஜெட் தாக்கலின் போது, மேயர் பிரியா அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 4.64 கோடி ரூபாய் செலவில், 'சிசிடிவி' கேமரா அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா அமைக்கும் பணிகள், இரண்டு மாதங்களில் முடிவடையும். வகுப்பறைகள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்களை, தலைமையாசிரியர், தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கலாம்.ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும், அவற்றை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், 'சிசிடிவி' பதிவுகள் அனைத்தும், சேமித்து வைக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X