மெரினாவில் நிரந்தர நடைபாதைமாற்றுத்திறனாளிகளுக்கு தீர்வுஅசைமன்ட் செய்தி//

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
மயிலாப்பூர் :மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிக்கு, பூஜை போடப்பட்டது. இதனால், அவர்கள் விரைவில் கடலில் கால் நனைத்து மனம் மகிழ்வர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெரு நகர மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டது.அதன்படி, நேற்று விவேகானந்தர் இல்லம்

மயிலாப்பூர் :மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிக்கு, பூஜை போடப்பட்டது. இதனால், அவர்கள் விரைவில் கடலில் கால் நனைத்து மனம் மகிழ்வர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெரு நகர மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டது.அதன்படி, நேற்று விவேகானந்தர் இல்லம் எதிரில் உள்ள கடற்கரையில், நிரந்தர நடைபாதை பணிக்காக பூமி பூஜை போடப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த பணி ஆறு மாத காலத்தில் முடிக்கப்பட உள்ளது. 260 மீட்டர் நீளமும், மூன்றடி அகலத்தில், கருவேல மரத்தில், கைப்பிடி வைத்து, பாதை அமைக்கப்படுவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் இணையம் பங்கேற்றது. அந்த அமைப்பினர் கூறுகையில், 'மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கு நடைபாதை கேட்டு, ஆறு ஆண்டுகளாக போராடினோம். தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது'என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X