போலீஸ் டைரி...: செங்கல்பட்டு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
வாலிபர் தற்கொலைமாமல்லபுரம்: மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவா மகன் மோகன், 41; நாவிதர். தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்கு கொண்டார். மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.போலி மது விற்றவருக்கு 'காப்பு'கூடுவாஞ்சேரி: மறைமலை நகர்

வாலிபர் தற்கொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவா மகன் மோகன், 41; நாவிதர். தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்கு கொண்டார். மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

போலி மது விற்றவருக்கு 'காப்பு'

கூடுவாஞ்சேரி: மறைமலை நகர் பகுதியில் குமரன், 34, என்பவர், போலி மதுபானம் விற்று வருவதாக, மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அவர்கள் அங்கு சென்று, மது விற்ற குமரனை கைது செய்து, அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், மறைமலை நகர் சிங்காரவேலன் தெருவில் பிரகாஷ், 29, என்பவரையும் கைது செய்த போலீசார், 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி அடுத்த, ராகவேந்திரா நகர் பகுதியில் வசித்தவர் பிரியதர்ஷினி, 23. இவருக்கு, மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வயிற்று வலி இருந்துள்ளது.கடந்த 21ம் தேதி செவ்வாய்க்கிழமை, வயிற்று வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பெரிய நத்தம், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி ஜெய்பிரேமலதா, 40; தனியார் பள்ளி ஆசிரியை.இவர், கடந்த 21ம் தேதி, செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், மகனுடன் இரவு 8:30 மணிக்கு, நென்மேலி சென்றார்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X