ராணுவ ஆசையுள்ள இளைஞர்கள் அக்னி பாதையை தேர்வு செய்வர்| Dinamalar

'ராணுவ ஆசையுள்ள இளைஞர்கள் அக்னி பாதையை தேர்வு செய்வர்'

Added : ஜூன் 24, 2022 | |
சென்னை:'ராணுவ ஆசை கொண்ட இளைஞர்கள் அக்னி பாதையைத்தான் தேர்வு செய்வர்' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில்பணியாற்ற வாய்ப்பளிக்கும், 'அக்னிபத்' என்ற புரட்சிகர திட்டத்தை, ஜூன் 14-ல் மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்னிபத் என்றால் நெருப்பு பாதை.ராணுவத்தில் இளைஞர்களின்
'ராணுவ ஆசையுள்ள இளைஞர்கள் அக்னி பாதையை தேர்வு செய்வர்'

சென்னை:'ராணுவ ஆசை கொண்ட இளைஞர்கள் அக்னி பாதையைத்தான் தேர்வு செய்வர்' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அ

வர் வெளியிட்ட அறிக்கை:இந்திய இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில்பணியாற்ற வாய்ப்பளிக்கும், 'அக்னிபத்' என்ற புரட்சிகர திட்டத்தை, ஜூன் 14-ல் மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்னிபத் என்றால் நெருப்பு பாதை.ராணுவத்தில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.


அதில், ஒன்று தான் குறுகிய கால ராணுவப் பணி. இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், வழக்கம்போல எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன; திட்டமிட்டு பல வதந்திகள் பரப்பப்பட்டன.அதனால், சில மாநிலங்களில் போராட்டம் என்ற பெயரில், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.ராணுவத்தில் சேரும் எண்ணம் கொண்டவர்கள், தேசத்தின் மீது தீராக் காதல் கொண்டவர்களாகவே இருப்பர். ஒருபோதும் தேசத்தின் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.


அக்னி வீரர்களில் 25 சதவீதத்தினர், நிரந்தர ராணுவப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ளவர்களில், துணை ராணுவப் படை, தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பணிக்கு சேர முடியும். அக்னி வீரர்களை பணியில் அமர்த்த, அரசுத் துறைகளும், தனியார் துறைகளும் போட்டி போடும்.


எனவே, 'நான்கு ஆண்டுகள் பணிக்குப் பின் வீரர்கள், வேறு வேலை கிடைக்காமல் அவதிப்படுவர்; தவறான பாதைக்கு செல்வர்; நக்சல் இயக்கங்களில் சேருவர்' என்ற, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. ராணுவ ஆசை கொண்ட இளைஞர்கள், அக்னி பாதையைத்தான் தேர்வு செய்வர்.இவ்வாறு வானதி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X