அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை பாராட்டுவதில் தயக்கம் இல்லை: வைகோ

Updated : செப் 05, 2011 | Added : செப் 02, 2011 | கருத்துகள் (80)
Share
Advertisement
முதல்வரை பாராட்டுவதில் தயக்கம் இல்லை, வைகோ,Vaiko , Jayalalitha,

சேத்தியாத்தோப்பு:""முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுவதில், ம.தி.முக.,விற்கு எந்த நெருடலும் இல்லை'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசினார்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது:கிராமத்துச் சூழலை உணர்ந்து, கூட்டுக் குடும்பங்களைக் கண்டு, நானும் கிராமத்துக்காரன் என்பதால், மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புறங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை வருத்தமளிக்கிறது. தண்ணீர் பிரச்னைக்காக நாளும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.தமிழ் உணர்வாளர்களின் உணர்ச்சியைப் புரிந்து கொண்டு, முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்காக அவரைப் பாராட்டுகிறோம்.


சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பொறுத்தவரை, தூக்குக் கயிறு நிரந்தரமாக அறுந்து விட்டதாக நம்புகிறோம்.தேர்தல் நேரத்தில், ம.தி.மு.க,.வுக்கு வாய்ப்பளிக்காத ஜெ.,வை பாராட்டலாமா... என, ம.தி.மு.க.,வில் யாரும் கேட்கவில்லை. முதல்வரை பாராட்டுவதன் மூலம், அவருக்கு பெருமை கூடி விடுமே என்று கருதவில்லை. தேர்தல் களம் வேறு; தமிழர்களின் நலன் காக்கும் நிலைவேறு என்பது அவர்களுக்குத் தெரியும். இது தான் ம.தி.மு.க.,வின் பலம்.மூவருக்கு மரண தண்டனை விஷயத்தில், உண்மைத் தன்மை என்ன என்பதற்கு, உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதில் சொல்லியாக வேண்டும்.இவ்வாறு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajasekar - Kovai,இந்தியா
03-செப்-201116:48:51 IST Report Abuse
rajasekar சிறந்த எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று வைகோ வை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் . ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை துணிந்து சுட்டி காட்டுவதோடு நல்ல செயல்களை மனமார பாராட்ட வேண்டும். தமிழக அரசியலில் இதுவரை இருந்த நாகரிகமற்ற தன்மை வைகோவால் மாற்ற படுகிறது . அரசியல் நாகரிகம் தொடர்ந்து காப்பாற்ற படட்டும் ஆரோக்கிய அரசியலே தமிழகத்தின் நலனுக்கு நல்லது
Rate this:
Cancel
TAMILANBAN - ottawa,கனடா
03-செப்-201115:13:36 IST Report Abuse
TAMILANBAN முதல்வர் இந்திய இறையாண்மையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இவரோ கடந்த 40 ஆண்டுகளில் அவ்வப்போது ரத்த ஆறு ஓடும் என்பார். கண்டனங்கள் குவிந்தால் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்பார். சமீபத்தில் கூட M.G.R.நகரில் நடந்த கூட்டத்தில் 1947 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் 2047 இல் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா நடைபெறும்போது இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்று பேசினார். இவர் மனதில் இந்தியா இறையாண்மைக்கு எதிரான ஒரு வக்கிர சிந்தனை நீண்ட நாட்களாகவே இருந்து வந்ததுள்ளது. இன்றும் இருக்கிறது. அது அவ்வபோது வெளிப்படும். இவரையும் இவர் இயக்கத்தையும் தமிழகத்தில் உள்ள திமுகவும் சரி அதிமுகவும் சரி இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள தமிழ் மக்களும் சரி முழுமையாக ஒதுக்குவதே எதிர்கால தலைமுறைக்கு நல்லது. இப்போது கூட உள்ளாட்சி தேர்தலில் ஏதேனும் கொஞ்சமாவது கரை தேற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவர் இப்போது முதல்வரை காக்கா பிடிக்கிறார். சும்மா பெயரளவுக்கு இந்த பாராட்டில் அரசியல் இல்லை என்கிறார். முதல்வர் ஏமாற மாட்டார். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியதும் ஜெயலலிதா திருந்த வில்லை என்று ஏகடியம் பேசியவர். என்னம்மா நடிக்கிறார் இந்த ஆள்
Rate this:
jagadesh - tiruppur,இந்தியா
03-செப்-201118:38:28 IST Report Abuse
jagadeshசரியா சொன்னீங்க....
Rate this:
Cancel
rajannambi - somangalam,இந்தியா
03-செப்-201115:13:13 IST Report Abuse
rajannambi that is our (chief minster) duty? in case of service to people?? vaiko point of view is correct! BUT BOTH ARE PURE POLITICAL STUND....,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X