திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த, சுற்றுலா கிராமமான கோவளத்தில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இதில், 800 மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்திருந்தது. இதனால் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர்.சாலையை சீரமைக்க, பள்ளி நிர்வாகம் சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதையடுத்து, 15வது நிதிக்குழு மானிய நிதியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 250 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலத்தில், புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.