நடைபாதை ஆக்கிரமிப்புஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சென்னை, பிராட்வே என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதாக, மறைந்த சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். 'நடைபாதையில் ஆக்கிரமிப்பு கூடாது' என, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, 2016ல், அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், மாநகராட்சி கமிஷனர்,

சென்னை, பிராட்வே என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதாக, மறைந்த சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். 'நடைபாதையில் ஆக்கிரமிப்பு கூடாது' என, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, 2016ல், அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக, இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்றால், தலைமைச் செயலர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.மேலும், அடுத்த வாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை, ஜூலை 4க்கு தள்ளி வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X