மனைவியை முத்தமிட்ட கணவருக்கு அடி உதை

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
அயோத்தி-உத்தர பிரதேசத்தில் புண்ணிய நதியில் நீராடியபோது மனைவியின் உதட்டில் முத்தமிட்டவரை சிலர் அடித்து, உதைத்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அயோத்தியில், கங்கைக்கு ஏழு கிளை நதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான சரயு நதியோரத்தில் தான் ராமஜென்ம பூமி உள்ளது. ராமர் கோவிலுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அயோத்தி-உத்தர பிரதேசத்தில் புண்ணிய நதியில் நீராடியபோது மனைவியின் உதட்டில் முத்தமிட்டவரை சிலர் அடித்து, உதைத்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.latest tamil news


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அயோத்தியில், கங்கைக்கு ஏழு கிளை நதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான சரயு நதியோரத்தில் தான் ராமஜென்ம பூமி உள்ளது. ராமர் கோவிலுக்கு வருவோர், இந்த புண்ணிய நதியான சரயுவில் நீராடிவிட்டு ராமரை தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சரயு நதியில் ஏராளமான பக்தர்கள் நீராடிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மனைவிக்கு மிக நெருக்கத்தில் நின்று உதட்டில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த சிலர், 'ராமஜென்ம பூமியில் இதுபோன்ற அசிங்கத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என கோஷமிட்ட படி கணவரை கரைக்கு இழுத்து வந்து சரமாரியாக அடித்து, உதைத்தனர்.


latest tamil news


இதைத் தடுக்க மனைவி எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது. இது சம்பந்தமான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அயோத்தி போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Dindigul,இந்தியா
30-ஜூன்-202219:21:43 IST Report Abuse
Karthik புருஷன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்துக்கும், உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறதுக்கும் என்ன சம்பந்தம். எல்லாத்துலயும் அரசியலை கலக்காதீங்க
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
29-ஜூன்-202214:25:32 IST Report Abuse
TamilArasan பொது இடங்களில் இது போன்று செய்பவர்களால் குழந்தைகளுடன் செல்ல சங்கடமாக உள்ளது...உங்கள் அணைப்பு கொஞ்சல் எல்லாம் நாலு செவத்துக்கள் திரை மறைவாக செய்ய வேண்டியது தானே மேலும் இன்று பெரும்பாலான விடுதிகள் திருமணம் ஆகாத ஜோடிகளையே அனுமதிக்கிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள் அப்படி இருக்க பொது இடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என்று குடும்பத்துடன் இருக்க வேண்டிய இடம் அந்த பகுதிகளில் எதற்கு இந்த நாய் காதல்...?
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
28-ஜூன்-202213:38:48 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ரூம் போட்டு லீவு போட்டு வருஷ கணக்கில் கொடுத்துகிட்டே இருங்க யாரு கேக்க போறா. அவன் அவன் பொண்ணு கிடைக்காம பைத்தியமா போய்கிட்டு இருக்கான் வைத்திருச்சிர கிளப்பிய மாதிரி பண்ணினா.. எல்லாம் பவர் ஸ்டார் போல் ஆயிட்டான் அவ்வல தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X