தொடர் வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி முடிச்சூரில் கைது

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
தாம்பரம், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு, மொபைல் போனில் மர்ம நபர் ஒருவர், தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைவராக பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும்; பழனிசாமி பதவியேற்க கூடாது. மீறினால், சேலம் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும்' எனக்கூறி, இணைப்பை துண்டித்தார்.அதே நபர், காலை, 9:00 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு

தாம்பரம், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு, மொபைல் போனில் மர்ம நபர் ஒருவர், தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைவராக பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும்; பழனிசாமி பதவியேற்க கூடாது. மீறினால், சேலம் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும்' எனக்கூறி, இணைப்பை துண்டித்தார்.அதே நபர், காலை, 9:00 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் அழைத்து, 'பன்னீர்செல்வம் பதவியேற்கவில்லை என்றால், தாம்பரம் ரயில் நிலையத்திலும் குண்டு வெடிக்கும்' எனக்கூறி, இணைப்பை துண்டித்தார்.இது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மிரட்டல் விடுத்தவர், சேலையூர், பராசக்தி நகரைச் சேர்ந்த வினோத்குமார், 39 என தெரியவந்தது.அவரின் மொபைல் போன் எண்ணின் இருப்பிடங்கள் கேம்ப் சாலை, முடிச்சூர் உட்பட பல பகுதிகளை காட்டியது. மொபைல் போனை, அவ்வப்போது 'ஆன்' செய்து பேசுவதும், 'சுவிட்ச் ஆப்' செய்வதுமாக போக்கு காட்டி வந்தார்.எனினும், வினோத்குமாரின் மொபைல் போன் எண்ணை பின்தொடர்ந்த போலீசார், நேற்று காலை முடிச்சூரில் அவரை கைது செய்தனர். போலீசார் கூறியதாவது:வினோத்குமார் மனைவி திவ்யாவுடன், தகராறு ஏற்படும் போதெல்லாம், கோபித்து கொண்டு, ரயில் நிலையங்களுக்கு, மிரட்டல் விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.கடந்த 2019ல் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அப்போது, முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், கைது செய்யப்பட்டார். இம்முறையும், அது போலவே குடிபோதையில் மிரட்டல் விடுத்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X