முக கவசம் கட்டாயம் தாம்பரம் கமிஷனர் உத்தரவு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தினமும், 30 முதல் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனை, ஹோட்டல், வணிக வளாகம் என பொது இடங்களில், கூடும்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தினமும், 30 முதல் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனை, ஹோட்டல், வணிக வளாகம் என பொது இடங்களில், கூடும் மக்கள், முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X