சர்வதேச ஓபன் சதுரங்கம்சேலம் வீரர் நிதின் முன்னிலை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
சென்னை, சென்னையில் நடந்து வரும் சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியில், தமிழக வீரரான சேலத்தைச் சேர்ந்த 'கிராண்ட் மாஸ்டர்' நிதின் ஏழு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.அகில இந்திய சதுரங்க கழகத்தின் ஆதரவுடன், மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் இணைந்து, மகாலிங்கம் கோப்பைக்கான, 13வது 'சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி -- 2022' எழும்பூரில்
சர்வதேச ஓபன் சதுரங்கம்சேலம் வீரர் நிதின் முன்னிலை

சென்னை, சென்னையில் நடந்து வரும் சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியில், தமிழக வீரரான சேலத்தைச் சேர்ந்த 'கிராண்ட் மாஸ்டர்' நிதின் ஏழு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.அகில இந்திய சதுரங்க கழகத்தின் ஆதரவுடன், மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் இணைந்து, மகாலிங்கம் கோப்பைக்கான, 13வது 'சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி -- 2022' எழும்பூரில் நடத்துகின்றன.இதில், 11 நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 15 சர்வதேச மாஸ்டர்கள், 36 பல்வேறு பட்டம் வென்ற வீரர்கள் உட்பட, 275 வீரர் -- வீராங்கனையர் விளையாடி வருகின்றனர்.இப்போட்டிகள், 'சுவிஸ்' முறையில், மொத்தம் 10 சுற்றுகளாக, நாள் ஒன்றுக்கு, ஒரு சுற்று வீதம் நடக்கிறது.நேற்று நடந்த ஏழாவது சுற்றில், மூன்று கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்திய சென்னை சிறுவன் விக்னேஷ், புள்ளிகளில் முன்னிலையில் இருந்த சேலத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் நிதின் உடன் மோதினர்.கடுமையான போராட்டத்திற்கு பின், நிதின் செந்தில்வேல் வெற்றி பெற்று 7 : 7 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.அடுத்தடுத்த இடங்களில் 6 புள்ளிகளில் ரஷ்ய வீரர் கிராண்ட் மாஸ்டர் சவ்செங்கோ போரிஸ் மற்றும் சென்னை வீரர் ஸ்ரீஹரி உள்ளனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X