தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் மாற்றம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதனுார் கிராமத்தில், மிகவும் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனுார் கிராமம், கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியில், மின் கம்பங்களுக்கு இடையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கின.தொங்கும் மின்கம்பிகளால், எந்த நேரமும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், மின்
 தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் மாற்றம்

கூடுவாஞ்சேரி:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதனுார் கிராமத்தில், மிகவும் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனுார் கிராமம், கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியில், மின் கம்பங்களுக்கு இடையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கின.
தொங்கும் மின்கம்பிகளால், எந்த நேரமும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், மின் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், தொடர் மின்வெட்டுக்கு காரணமாக இருப்பதாலும், தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, புதிய மின் கம்பங்களை மாற்றி, தாழ்வாக சென்ற மின் கம்பிகளை உயரமாக சரி செய்து, சீரான மின் வினியோகம் செய்வதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X