ரூ.5 கோடி கோவில் நிலம்மீட்பு

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:உடுமலை அருகே ஜம்பலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32.87 ஏக்கர் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆண்டியகவுண்டனுாரில், ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 32.87 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது.நிலத்தை, 20 ஆண்டுகளாக, 10 பேர் ஆக்கிரமித்திருந்தனர். பிப்ரவரியில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற,

திருப்பூர்:உடுமலை அருகே ஜம்பலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32.87 ஏக்கர் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆண்டியகவுண்டனுாரில், ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 32.87 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது.நிலத்தை, 20 ஆண்டுகளாக, 10 பேர் ஆக்கிரமித்திருந்தனர். பிப்ரவரியில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற, அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையில், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய்த் துறையினர், போலீசார், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, கோவில் நிலத்தை நேற்று மீட்டனர்.நிலம் கோவில் சுவாதீனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் நிலம் என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. நிலத்தின் மொத்த சந்தை மதிப்பு, 5 கோடி ரூபாய்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X