வாணியம்பாடி:வாணியம்பாடி தாலுகா பகுதியில், மூன்று மாதத்தில், 400 பைக்குகளை திருடிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்
.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமாக ஒரே பைக்கில் சுற்றிய மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள், வாணியம்பாடி அருகேயுள்ள கோணாமேடையைச் சேர்ந்த விஷ்ணுவரதன், 20, சூரியகுமார், 20, சாரதி வர்மன், 21, என்பது தெரிந்தது.மூன்று மாதங்களில் வாணியம்பாடி தாலுகா பகுதியில், 400 பைக்குகளை அவர்கள் திருடியது தெரிய வந்தது. பைக்குடன் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.