அடங்க மாட்றாங்கய்யா!ரூ.5,000 லஞ்சம்அரசு எழுத்தர் கைது

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
திண்டிவனம்:இலவச வீட்டு மனை பட்டா ஆவணங்கள் வழங்க, விவசாயி ஒருவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, திண்டிவனம் தாலுகா பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆசூரைச் சேர்ந்தவர் கலைமணி. இவரது பெயரிலான இலவச வீட்டு மனை பட்டாவை, மகன் யுவராஜ் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்

திண்டிவனம்:இலவச வீட்டு மனை பட்டா ஆவணங்கள் வழங்க, விவசாயி ஒருவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, திண்டிவனம் தாலுகா பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆசூரைச் சேர்ந்தவர் கலைமணி. இவரது பெயரிலான இலவச வீட்டு மனை பட்டாவை, மகன் யுவராஜ் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பதிவறை எழுத்தர் சிவஞானவேல், 48, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சிவஞானவேலுவிடம் யுவராஜ் பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X