கைது செய்யாதது ஏன்?உயர் நீதிமன்றம் கேள்வி!உயர்நீதிமன்றம் அதிருப்தி| Dinamalar

கைது செய்யாதது ஏன்?உயர் நீதிமன்றம் கேள்வி!உயர்நீதிமன்றம் அதிருப்தி

Added : ஜூன் 24, 2022 | |
மதுரை:'தேனி மாவட்டத்தில் அரசு நிலத்தை தனியாருக்கு மாற்றி மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இன்னும் கைது செய்யாதது ஏன்?' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்தது.தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்திற்கு போலி ஆவணம் மூலம் தனி நபர்களுக்கு பட்டா வழங்கி மோசடி நடந்து உள்ளது.இதுதொடர்பாக,

மதுரை:'தேனி மாவட்டத்தில் அரசு நிலத்தை தனியாருக்கு மாற்றி மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இன்னும் கைது செய்யாதது ஏன்?' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்திற்கு போலி ஆவணம் மூலம் தனி நபர்களுக்கு பட்டா வழங்கி மோசடி நடந்து உள்ளது.இதுதொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகி அன்னபிரகாஷ் மற்றும் சில வருவாய்த்துறை அதிகாரி கள் மீது தேனி சி.பி.சி.ஐ.டி.,போலீசார் வழக்குப் பதிந்தனர்.


கைதான துணை தாசில்தார் மோகன்ராமின் ஜாமின் மனுவை, மே மாதம் உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், நேற்று பிறப்பித்த உத்தரவு:வழக்கில் சில அரசு அதிகாரிகள் உட்பட எட்டு பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் கைதாகினர். அவர்களில் மூன்று பேர் ஜாமினில் வந்துள்ளனர். மற்ற நான்கு பேர், அரசு அதிகாரிகள். இவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?எனவே, அரசுத் தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X