மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் காரியாபட்டி பஸ்கள் நிறுத்த இடமில்லை| Dinamalar

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் காரியாபட்டி பஸ்கள் நிறுத்த இடமில்லை

Added : ஜூன் 24, 2022 | |
காரியாபட்டி---மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் காரியாபட்டி 76 வழித்தடத்தில் இயங்கும் பஸ் நிறுத்துவதற்கு இடமில்லாததால் உடனே கிளம்ப வேண்டிய நிலை உள்ளதால் டிரைவர், கண்டக்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி சற்று ஓய்வெடுத்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 76 வழித்தடத்தில் மதுரை, காரியாபட்டி

காரியாபட்டி---மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் காரியாபட்டி 76 வழித்தடத்தில் இயங்கும் பஸ் நிறுத்துவதற்கு இடமில்லாததால் உடனே கிளம்ப வேண்டிய நிலை உள்ளதால் டிரைவர், கண்டக்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.



மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி சற்று ஓய்வெடுத்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 76 வழித்தடத்தில் மதுரை, காரியாபட்டி டிப்போவிலிருந்து அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரியார் பஸ் ஸ்டாண்டில் 76 வழித்தட பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகளை இறக்கிவிட்ட உடன் கிளம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.



டிரைவர், கண்டக்டர்கள் சற்று ஓய்வெடுக்கவும், கழிப்பிடம் செல்ல நேரம் கிடைக்காததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் காரியாபட்டி டிப்போ டிரைவர், கண்டக்டர்களுக்கும், மதுரை டிப்போ டிரைவர், கண்டக்டர்களுக்கும் பஸ் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. நேற்று பஸ் நிறுத்துவதில் மதுரையில் ஏற்பட்ட தகராறு காரியாபட்டி பஸ் ஸ்டாண்டிலும் நீடித்தது.ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.



இதையடுத்து அங்கிருந்த மற்ற டிரைவர், கண்டக்டர்கள் சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர். இது தொடர் கதையாக இருப்பதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X