என்.ஐ.ஏ., புதிய டைரக்டர் ஜெனரலராக தின்கர் குப்தா நியமனம்

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி, தின்கர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுபற்றி மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாபில், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான தின்கர் குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓய்வு பெறும் வரை, அதாவது, 2024, மார்ச்
என்ஐஏ, புதிய டைரக்டர் ஜெனரல், தின்கர் குப்தா

புதுடில்லி : என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி, தின்கர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாபில், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான தின்கர் குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓய்வு பெறும் வரை, அதாவது, 2024, மார்ச் 31 வரை இப்பதவியை வகிப்பார். தின்கர் குப்தாவின் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மத்திய ஆயுதபடை டி.ஐ.ஜி., குல்தீப் சிங், கூடுதல் பொறுப்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக உள்ளார். மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின், உள்துறை பாதுகாப்பு பிரிவின் சிறப்பு செயலர் பதவிக்கு, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான சுவாகத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1987ல் சத்தீஸ்கரில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான இவர், 2024, நவ.,30ம் தேதி வரை இப்பதவியில் பணியாற்றுவார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-ஜூன்-202219:13:39 IST Report Abuse
jayvee . கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபயணம் புஸ்ஸுதான
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X