பஸ் ஸ்டாண்ட் குடிநீர் குழாயில் காத்துதாங்க வருது!

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
அத்துமீறும் வாகனங்கள்பொள்ளாச்சி முருகாலயா தியேட்டர் அருகே, ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அத்துமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணன், பொள்ளாச்சி.போக்குவரத்து ஸ்தம்பிப்புபொள்ளாச்சி சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு முன், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோட்டில்

அத்துமீறும் வாகனங்கள்

பொள்ளாச்சி முருகாலயா தியேட்டர் அருகே, ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அத்துமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணன், பொள்ளாச்சி.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பொள்ளாச்சி சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு முன், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.- திருமுருகன், பொள்ளாச்சி.

ரோட்டை சீரமைக்கணும்!
ஆனைமலை, காளியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, ரோடு சிதிலமடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- மாரிமுத்து, காளியாபுரம்.

குடிநீருக்கு திண்டாட்டம்
பொள்ளாச்சி, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகங்களில், குடிநீர் குழாய் உடைந்து பல ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குடிநீருக்காக அலைமோதுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராம், பொள்ளாச்சி.

சிக்னலை இயக்க வேண்டும்
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரோடு, பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரோடுகள் சந்திப்பு பகுதியில் சிக்னலும் சீராக இயங்குவதில்லை, போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.- முருகேஷ், பொள்ளாச்சி.

கழிப்பிடத்தை பராமரிக்கணும்!
ஆனைமலை, நரிக்கல்பதி கிராமத்தில் கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கழிப்பிடத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.- வெங்கடேஸ், ஆனைமலை.

போக்குவரத்துக்கு இடையூறு
வால்பாறை நகரில், பல இடங்களில் கடைகளுக்கு முன் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- ராஜா, வால்பாறை.

'சிக்னல்' அமைக்க வேண்டும்
ஆனைமலை முக்கோணம் பகுதியில், 'சிக்னல்' அமைக்காமல் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆனைமலையில் போக்குவரத்து சிக்னல் அமைத்து, வாகன இயக்கத்தை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராஜ், ஆனைமலை.

தீர்வு வேண்டும்
வால்பாறை நகரில் அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு, போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும். அத்துமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, கட்டுப்படுத்த வேண்டும்.- விமல்,

வால்பாறை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X