பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சரமாரி புகார்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
அன்னுார் : அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பொது சுகாதார பயன்பாட்டுக்காக கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் உறிஞ்சும் மோட்டார் புதிதாக வாங்கி டிராக்டர் டேங்கில் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட, 43 தீர்மானங்கள்

அன்னுார் : அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பொது சுகாதார பயன்பாட்டுக்காக கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் உறிஞ்சும் மோட்டார் புதிதாக வாங்கி டிராக்டர் டேங்கில் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட, 43 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இதில், வரவு, செலவு கணக்கு சமர்பிக்கவில்லை என்றும், புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் ஏலத்தில் குழப்பங்கள் இருப்பதாகவும், துப்புரவு பணிக்கு ஆட்கள் வருவதில்லை, பகலிலும் பல இடங்களில் தெருவிளக்குகள் எரிகிறது உட்பட பல்வேறு புகார்களை கவுன்சிலர்கள் சரமாரியாக முன்வைத்து பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X