அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில்,குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு கடந்த ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, அதில் வசிப்போருக்கான குடியிருப்போர் நல சங்கம் நேற்று துவங்கப்பட்டது.தலைவராக பன்னீர்செல்வம், செயலாளராக மாலதி,பொருளாளராக செய்யது முகமது, துணைத்தலைவராக ரமீஜா, துணைசெயலாளராக சண்முகம், கவுரவ ஆலோசகராக மாதவி, ஒருங்கிணைப்பாளராக முத்துகிருஷ்ணன் ஆகியேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுதவிர, செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.