திருப்பூர் : திருப்பூர், எம்.எஸ்., நகர் விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.இப்பள்ளி மாணவி பிரனிதி - 495 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவி நக் ஷத்ரா - 492 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி தன்யா - 483 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.