கருமுட்டை விற்பனை சட்டத்தில் கடுமை ஏன்? சீனியர் வக்கீல் விரிவான விளக்கம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
கோவை : ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்தது தொடர்பாக, அச்சிறுமியின் தாயார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கருமுட்டை விற்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.இச்சட்டம் குறித்து, கோவை மூத்த வக்கீல் சண்முகம் கூறியதாவது:செயற்கை கருத்தரித்தல் முறையில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. அதன்
கருமுட்டை விற்பனை சட்டத்தில் கடுமை ஏன்? சீனியர் வக்கீல் விரிவான விளக்கம்

கோவை : ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்தது தொடர்பாக, அச்சிறுமியின் தாயார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கருமுட்டை விற்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டம் குறித்து, கோவை மூத்த வக்கீல் சண்முகம் கூறியதாவது:செயற்கை கருத்தரித்தல் முறையில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மத்திய அரசு, 'இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம்' என்ற ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதற்காக, மத்திய, மாநில அரசுகள் சார்பில் தனித்தனியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கமிட்டி தலைவராக, சுகாதார துறை இணை செயலர், துணை தலைவராக இணை இயக்குனர் மற்றும் என்.ஜி.ஓ., பெண் உறுப்பினர், சுகாதார துறை வக்கீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




புதிய சட்டம் சொல்வதென்ன?



l புதிய சட்டத்தின் படி, 21- 50 வயதுள்ள பெண்களிடம் மட்டும்தான் கருமுட்டை எடுக்கப்பட வேண்டும். 21 வயதுக்கு கீழ் உள்ள மைனர் பெண்களிடம், கரு முட்டை எடுப்பது சட்டப்படி குற்றம்.

l இயற்கையிலேயே குழந்தைபேறு இல்லாத ஒரு பெண், கர்ப்பம் தரிப்பதற்கு மற்றொரு பெண்ணிடம், அவரது விருப்பத்தின் பேரில் கருமுட்டை எடுக்கப்படுகிறது.

l ஒரு பெண்ணிடம், கருமுட்டை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு அந்த பெண் நல்ல உடல் தகுதி உள்ளவராக, வேறு நோய் ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும்.

l அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்து, கரு முட்டை எடுப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி எடுத்து கூற வேண்டும். கருவிலுள்ள சிசுவுக்கு, சட்ட ரீதியான உரிமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்

.l கருமுட்டை கொடுக்கும் பெண்ணின் சம்மத கடிதம், ஒரு ஆண்டுக்கான இன்சூரன்ஸ், டிஸ்சார்ஜ் அறிக்கை கொடுக்க வேண்டும். ஆனால், கரு முட்டையை வியாபார நோக்கத்துடன் எடுத்து விற்பது சட்டப்படி குற்றம்.

l கரு முட்டை விற்பனை குறித்து விளம்பரம் செய்தால், அதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை, 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமுள்ளது.

l கருமுட்டை விற்பனை செய்தால், அதிகபட்சம் 5 - 10 லட்சம் ரூபாய் வரை அபராதம், இரண்டாம் முறை விற்றால், மூன்று ஆண்டு முதல் எட்டு ஆண்டு வரை சிறை தண்டனை, 10 - 25 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. சிறுமிகளிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்தாலும், இத்தண்டனை பொருந்தும்.

l கருமுட்டை கொடுப்பது, பெண்ணின் மனம், உடல், பண்பு நெறி சம்பந்தப்பட்டது. அதனால்தான் சட்டம் மிக கடுமையாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, வக்கீல் சண்முகம் கூறினார்.

பள்ளியில் வாழ்வியல் சட்ட கல்வி!

வக்கீல் சண்முகம் கூறுகையில், ''இயற்கை கொடுத்த மிகப்பெரிய கொடை தாய்மை. அது விலங்கிற்கும், மனிதனுக்கும் உள்ளது. மனிதர்கள் கருமுட்டையை விற்பனை செய்கின்றனர். கருவிலிருந்து கல்லறை வரை வியாபாரமாகி விட்டது.இதை சட்டத்தால் மட்டும் தடுக்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, பள்ளிகளில் வாழ்வியல் சட்டம் என்ற ஒரு பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்.போக்சோ சட்டம், பணியிடத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சட்டங்கள் குறித்து, பாட திட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், சமுதாயத்தில் இது போன்ற குற்றங்கள் நடைபெறாது,'' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X