திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த தொழுதுாரில், விஜய் மக்கள் இயக்கம் கடலூர் தென்மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விஜய் மக்கள் இயக்கத்தின் கடலுார் தென்மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா, மாநில பொதுச்செயலாளர் புஸ்சிஆனந்த் அறிவுறுத்தலின் பேரிலும், கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சீனு, கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் முன்னிலையில் தொழுதூரில் கொண்டாடப்பட்டது. விஜய் மக்கள் இயக்க கடலுார் தென்மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கி, விஜய்
மக்கள் இயக்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் கார்த்திக், தொண்டரணி பொருளாளர் முத்து, தொண்டரணி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் உஸ்மான், மங்களூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆயிரம் பெருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.இதேபோல் மங்களூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் சிறுபாக்கம், நரையூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது. ம.பொடையூரில் பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஆலம்பாடி கிராமத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியேற்றப்பட்டு, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இளைஞரணி நிர்வாகிகள் ஐயப்பன், கார்த்தி, சுரேஷ், சிவா, மணி உட்பட பலர் பங்கேற்றனர்.