திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் இயங்கி வரும் மாணவர் சேர்க்கை மையத்தின் மூலம் கல்லுாரியில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லுாரி முதல்வர் அறிவுடை நம்பி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வது. விண்ணப்பத்திற்கான தகவல்களை பதிவு செய்தல், பதிவு செய்து அதற்கான பணத்தை செலுத்துதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்தும் இணைய வழியாகவே நடைபெறுகின்றது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tngasa.in& www.tngasa.org எனும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் கடந்த 22ம் தேதி முதல் இயங்கி வரும் மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் ஜூலை 7 ம் தேதி ஆகும். எனவே மாணவர்கள் இச்சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.