புவனகிரி, : கீரப்பாளையம் ஒன்றியம், தொடக்க நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி குறித்த சிறப்பு முகாம் நடந்தது.வடலுார் கல்வி மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியம் கானுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் 4 -மற்றும் 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி குறித்த இரண்டு நாள் சிறப்பு முகாம் நடந்தது. தலைமையாசிரியர் பாண்டுரங்கன் முகாமை துவக்கி வைத்தார்.
ஆசிரியர் கருத்தாளரகளாக கோவிந்தநல்லுார் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் விமலாபுஷ்பராணி, கானுார் பள்ளி தலைமையாசிரியர் ஆண்ட்ரூவின் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.பயிற்சி வகுப்பில் கானுார் குருவட்ட மையத்திற்குட்பட்ட இடை நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், கோபி செய்திருந்தனர்.