தமிழகத்தில் வேகமாக பரவும் 'பிஏ 4, பிஏ 5' வகை கொரோனா

Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் 'பிஏ 4 பிஏ 5' வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக மக்கள் நலவாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: உலகம் முழுதும் தினசரி 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 8 மாநிலங்களில் 24 மணி நேரத்தில் 6000 வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து
Corona Virus, Covid 19, tnfightscorona

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் 'பிஏ 4 பிஏ 5' வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக மக்கள் நலவாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: உலகம் முழுதும் தினசரி 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 8 மாநிலங்களில் 24 மணி நேரத்தில் 6000 வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. சேலம் நாமக்கல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


latest tamil newsதமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னையில் பாதிக்கப்படுகின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்களுக்கு சளி காய்ச்சல் இருமல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம். எனவே பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது.தற்போது கொரோனா பரவலின் பெரும் பகுதி 'பிஏ- 4 பிஏ- 5' என்ற வகை தொற்றாக தான் உள்ளன. இவை வேகமாக பரவும் தன்மை உடையது. தமிழகத்தில் வரும் ஜூலை 10ல் 1 லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-202209:24:33 IST Report Abuse
john இப்பொழுது உள்ள கொரோன எல்லாம் பிஏ படித்தவை
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
24-ஜூன்-202210:28:45 IST Report Abuse
தமிழன்PA வா, BA வா. தமிழ் ரொம்ப ஓவரா பழமையா இருக்கா, சில சமயம் விஷயம் முழுசா புரியாம போயிடுது....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202206:20:14 IST Report Abuse
Mani . V "யாரங்கே கூப்பிடுங்கள் நம் இளவரசரை. அவர் கூட்டம் போட்டு லட்சக்கணக்கில் மக்களை கூட்டினால் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி விடும்".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X