திருப்பூர், : காங்கயம் அருகேயுள்ள ஆனுார் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வில், அபார மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.இப்பள்ளி மாணவி ரம்யா, 592 மதிப்பெண் பெற்று முதலிடம். நித்யஸ்ரீ, 589 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், ஹரிபிரசாத், பவநேத்ரா ஆகியோர், தலா 588 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய, 126 மாணவர்களில், 580க்கு மேல், 8 பேரும், 570க்கு மேல் 16 பேர், 560க்கு மேல் 26 பேர், 550க்கு மேல், 35 பேர், 500க்கு மேல், 61 பேர், 400 மதிப்பெண்ணுக்கு மேல், 100 பேர் எடுத்து அசத்தியுள்ளனர்.அனைத்து பாடங்களிலும் சென்டம் பெற்ற ஒரே பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் பொறியியல் 'கட்ஆப்' 200 பெற்று ஹரிபிரசாத், மருத்துவ 'கட்ஆப்', 199.5 பெற்று மாணவர் பரணியும் சாதனை படைத்துள்ளனர். சாதித்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் அரவிந்த் நல்லதம்பி பாராட்டினார்.