அவிநாசி : அவிநாசி பேரூராட்சி, வள்ளுவர் வீதி அருகே ஸ்ரீராம் நகர் எக்ஸ்டன்சன், முதல் வீதியில், நேற்று முன்தினம் மாலை ஒரு நாய், அவ்வழியாக செல்வோரையும், டூவீலரில் சென்றவர்களையும் துரத்தி துரத்தி கடித்தது. இரவு இரண்டு பெண்களை கடித்து ஓடி விட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், நாயை தேடினர்.
ஆனால், கிடைக்கவில்லை.அப்பகுதி கவுன்சிலர் கருணாம்பாள் கூறுகையில், ''அவிநாசியில் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது.பொதுமக்கள் பயத்துடனே நடமாடுகின்றனர். பொதுமக்களை கடித்த நாயை பிடிக்க வேண்டும். நாய் கடித்த ஐந்து பேருக்கு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது,'' என்றார்.