'ரத்தப்புற்றுநோயா...பயப்படாதீங்க அதிநவீன சிகிச்சை முறை உள்ளது'

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
''ரத்தப் புற்றுநோய்க்கு, அதி நவீன சிகிச்சை முறைகள் உள்ளதால், இதுகுறித்து பயப்பட வேண்டியதில்லை; குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன,'' என, கே.எம்.சி.எச்., ரத்தபுற்றுநோய் சிகிச்சை நிபுணர் ரமாபிரபாஹரி சதீஷ்குமார் கூறினார்.அவர் கூறியதாவது:உடலில் எலும்பு மஜ்ஜை சீரான முறை வேலை செய்யாததால், ஏற்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்று ரத்தப் புற்றுநோய். சில வகை ரத்தப் புற்றுநோய்



''ரத்தப் புற்றுநோய்க்கு, அதி நவீன சிகிச்சை முறைகள் உள்ளதால், இதுகுறித்து பயப்பட வேண்டியதில்லை; குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன,'' என, கே.எம்.சி.எச்., ரத்தபுற்றுநோய் சிகிச்சை நிபுணர் ரமாபிரபாஹரி சதீஷ்குமார் கூறினார்.


அவர் கூறியதாவது:உடலில் எலும்பு மஜ்ஜை சீரான முறை வேலை செய்யாததால், ஏற்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்று ரத்தப் புற்றுநோய். சில வகை ரத்தப் புற்றுநோய் குழந்தைகளுக்கு வரும்; சிலவகை பெரியவர்களுக்கு வரும்.ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களே, நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. ரத்தப் புற்றுநோய் எலும்பு மஜ்ஜையை தாக்கினால், இயல்புக்கு மாறாக வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாகிவிடும்.உடல் நடுக்கத்துடன் ஜுரம், இரவில் அதிகம் வியர்ப்பது,

உடல் பலவீனம், அடிக்கடி ஏதாவது நோய் தொற்று ஏற்படுவது, எந்த முயற்சியும் செய்யாமலே உடல் எடை குறைவது, நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், பல் துலக்கும்போது ரத்தக்கசிவு ஏற்படுவது, மூக்கில் ரத்தம் கசிவது, சருமத்தில் சிவப்பு திட்டுகள் ஏற்படுவது போன்றவை, எலும்பு மஜ்ஜை பாதிப்பின் அறிகுறிகள்.முழு ரத்த எண்ணிக்கை மற்றும் ரத்தத்தில் நுண்ணோக்கி பரிசோதனைகள் மூலம், குறைந்தபட்சம் என்ன பாதிப்பு என்பதை கண்டறியலாம். இவற்றில் வரும் முடிவுகளுக்கு ஏற்ப, அடுத்த கட்ட பரிசோதனை செய்யப்படும். இப்பரிசோதனைகளில் ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால், எலும்பு மஜ்ஜை மற்றும் மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்படும். ரத்தப் புற்றுநோய்க்கு, அதிநவீன சிகிச்சை முறைகள் உள்ளதால்,

இதுகுறித்து பயப்பட வேண்டியதில்லை; குணப்படுத்த அதிக வாய்ப்பும் உள்ளது. ரத்தப் புற்றுநோயில் தெரிந்து கொள்ள வேண்டியது, அது கடும் எலும்பு மஜ்ஜை புற்றுநோயா அல்லது நாள்பட்ட ரத்த புற்றுநோயா என்பது மட்டும்தான். எலும்பு மஜ்ஜை புற்று நோயாக இருந்தால், 24 முதல் 48 மணி நேரத்தில் சிகிச்சையை துவக்கவும், நாள்பட்ட புற்றுநோயாக இருந்தால், பெரும்பாலும் புறநோயாளியாகவே வைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ளவும் பரிந்துரைப்போம்.கே.எம்.சி.எச்.,ல் அனைத்து விதமான ரத்தப் புற்றுநோய்களுக்கும், அதிநவீன சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பிஇடி ஸ்கேன், பரிசோதனை கூடங்கள், வார்டு வசதிகள், எலும்பு மஜ்ஜை மாற்று யூனிட் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X