38 ஆயிரம் நபர்களின் நகைக்கடன் தள்ளுபடியை ரத்து செய்ய உத்தரவு

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை : அரசு நிபந்தனைக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட 37 ஆயிரத்து 984 பேரின் நகை கடன் தள்ளுபடியை ரத்து செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : அரசு நிபந்தனைக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட 37 ஆயிரத்து 984 பேரின் நகை கடன் தள்ளுபடியை ரத்து செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.latest tamil news


தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.நிபந்தனைகள்


இதையடுத்து 2021 மார்ச் 31 வரை நகை கடன் பெற்றவர்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய 2021 நவ. 1ல் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுஅரசாணை வெளியிடப்பட்டது.அதில் 'பயிர்க் கடன் தள்ளுபடியில் பயன்பெற்றவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை' உட்பட பல்வேறு நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன.அதன் அடிப்படையில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வங்கிகளில் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன. இறுதியாக 14.50 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற 6000 கோடி ரூபாய்கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.இறுதி கட்டம்
தேர்வான பயனாளிகளிடம் நடப்பாண்டு பிப். இறுதியில் இருந்து கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் திரும்ப வழங்கும் பணி துவங்கியது. அந்த பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலக அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.அதில் அரசு ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 37 ஆயிரத்து 984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறிப்பட்டு உள்ளது.


latest tamil newsசான்றுஎனவே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அசல் மற்றும் வட்டி தொகையான 160 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யக் கூடாது என மண்டல இணைபதிவாளர்களுக்குகூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தகுதியற்ற கடன்தாரர்களுக்கு தள்ளுபடி சான்று வழங்கப் பட்டிருப்பின் அவற்றை உடனடியாக ரத்து செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAPURUSOTHAMAN - Tamilnadu ,இந்தியா
25-ஜூன்-202210:02:20 IST Report Abuse
RAJAPURUSOTHAMAN மாண்புமிகு முதல்வர் அவர்களே . எனது பெயர் ரா சிவசக்தி நான் அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்தில் உள்ள முனியன் குறிச்சி எனும் கிராமத்தில் கதவு எண் 779. தெற்குத் தெரு என்ற முகவரியில் வசிக்கிறேன் எனது தொலைபேசி எண் 8248435976 நான் தங்களிடம் கோரிக்கையாக வேண்டுவது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி பற்றியது. எனது கணவர் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை கொண்ட ஒரு சிறிய குடும்பம் எனது கணவர் உணவகம் ஒன்றில் கூலி வேலை செய்து அதில் வரும் சிறிது வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றேன் நான் கொரோனா வைரஸ்(COVID-19) பாதித்த காலகட்டத்தில் எனது கணவர் வேலை இழந்த நிலையில் எனது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து எனது குடும்பத்தை நடத்தி வந்தேன் எனக்கு சொந்த வீடு அரசு வேலை மற்றும் கார் போன்ற வாகனங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்னிடம் உள்ளது 14 சென்ட் நிலம் மட்டுமே .நான் பயிர் கடன் போன்ற எந்த ஒரு அரசு சலுகையையும் பெறவில்லை அதுபோல் தாங்கள் ஆணையிட்ட படி 5 பவுன் நகை க்கும் குறைவாகவே நகையை நான் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து உள்ளேன் இருந்தும் எனது பெயர் கூட்டுறவு கடன் ரத்து பற்றிய அறிக்கையில் வரவில்லை ஏன் எனது பெயர் வரவில்லை என்று எங்கள் கூட்டுறவு வங்கியில் கேட்டும் எந்த ஒரு பதிலும் தெரியவில்லை என்று பதில் கூறுகின்றனர் ஆகவே தாங்கள் எனது மனுவை பரிசீலித்து எனது நகை கடனை நீக்கம் செய்து என் குடும்பம் வறுமை எனும் கோரப்பிடியில் சிக்காமல் வாழ தாங்கள் ஆவண செய்யுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இப்படிக்கு. ரா.சிவசக்தி.
Rate this:
Cancel
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
24-ஜூன்-202213:09:30 IST Report Abuse
undu urangi sezhitthu வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24-ஜூன்-202212:13:12 IST Report Abuse
Ramalingam Shanmugam யார் வீடு பணத்தை யார் தள்ளுபடி செய்வது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X