மின்சார கார் தீப்பற்றி எரிந்தது: டாடா நிறுவனம் விசாரணை

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: மும்பையில் மின்சார கார் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக, அதை தயாரிக்கும் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் விசாரணையை துவக்கியுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே, மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தன.இந்நிலையில்,
Tata Nexon EV, fire, Mumbai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மும்பையில் மின்சார கார் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக, அதை தயாரிக்கும் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் விசாரணையை துவக்கியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே, மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தன.

இந்நிலையில், 'நெக்சான்' என்ற மின்சார கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான, 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இது குறித்து, இந்தக் காரை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: நான்கு ஆண்டுகளாக மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதுவரை, 30 ஆயிரம் கார்கள் விற்கப்பட்டுள்ளன. அவை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கி.மீ., பயணம் செய்துள்ளன. இந்நிலையில், எங்கள் நிறுவன கார் முதல் முறையாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆராய விசாரணையை துவக்கிஉள்ளோம்.

எங்களுடைய வாகனங்கள் மற்றும் அதைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். நடந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வந்ததும் அது வெளியிடப்படும். குறைபாடுகள் இருந்தால், அதைக் களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
24-ஜூன்-202213:36:06 IST Report Abuse
mohan உலகம் முழுவதும் இந்த பிரச்னை இருக்கிறது..பாட்டரி இணைப்பு மற்றும், இன்சுலேஷன் , பிரச்சனையாக இருக்கும்.. மிக அதிக லித்தியம் பாட்டரி, பாக்டரியில் தயாரிக்கும் போது, அதனுடைய செல் தடுப்பான்கள் எல்லா இடத்திழும், நுண் துளைகள் இருக்குஆதவாறு பார்ப்பது மிக கடினம், ஒரு செல் கட்டமைக்கு முன், அதில் வரும் பொருள்களின் தரத்தை, மிக நுண்ணியமாக பார்க்க வேண்டும்..இந்த மாதிரி விபத்துகள், இந்த குறைபாட்டினால் வர கூடியவை...அடிக்கடி சார்ஜ் டிஸ்சார்ஜ் ஆகும் போது, செல்கள் விரிவடையும், சுருங்கும்..இதற்கேற்றவாறும் , விபத்து வரும், ஒரு சில செல் போன்கள், சார்ஜ் ஏற்றும் போது கூட தீப்பிடிப்பதுண்டு...இதை அனைத்தையும் பற்றிய ஆராய்ச்சி வேண்டும்...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
24-ஜூன்-202213:10:35 IST Report Abuse
Barakat Ali பேட்டரி கார் சக்ஸஸ் ஆனா எண்ணெய் இறக்குமதி குறையும் .......... இப்படி யோசிச்சா ????
Rate this:
Cancel
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
24-ஜூன்-202211:45:19 IST Report Abuse
undu urangi sezhitthu வெளிப்புறத்தில் அதிக தீ கொழுந்து விட்டு எரிகிறது? முதலில் அங்கிருக்கும் CCTV க்கள் உதவுமா என்று பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X