'பிரிக்ஸ்'ஐ வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம்

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ''பிரிக்ஸ் அமைப்பை சர்வதேச அமைப்பாக வலுப்படுத்த வேண்டும்'' என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.'பிரிக்ஸ்' அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் 14வது மாநாடு சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தலைமையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று துவங்கியது. சீன அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று
BRICS summit 2022,Modi,Narendra Modi,PM Modi,நரேந்திர மோடி,மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ''பிரிக்ஸ் அமைப்பை சர்வதேச அமைப்பாக வலுப்படுத்த வேண்டும்'' என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

'பிரிக்ஸ்' அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் 14வது மாநாடு சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தலைமையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று துவங்கியது. சீன அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

பிரிக்ஸ் மாநாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தப் படுகிறது. கொரோனா பரவலின் தீவிரம் குறைந்துஇருந்தாலும் அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை. கொரோனா தொற்றால் பல நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. பொருளாதார சரிவிலிருந்துமீள பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


latest tamil news



பிரிக்ஸ் சார்பில் துவக்கப்பட்டுள்ள வளர்ச்சி வங்கியில் சேரும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பிரிக்ஸ் அமைப்பை வெறும் பேச்சு நடத்தும் அமைப்பாக இல்லாமல் சர்வதேச அமைப்பாக மாற்ற வேண்டும்.பிரிக்ஸ் இளைஞர்கள் மாநாடு பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகளை நாம் நடத்த வேண்டும்.

இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் யோசனைகள் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மாநாட்டில் சீன அதிபர் ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரும் பேசினர். மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
24-ஜூன்-202211:45:03 IST Report Abuse
Sandru ....
Rate this:
Cancel
24-ஜூன்-202208:16:38 IST Report Abuse
அப்புசாமி லடாக் பிரச்சனையெல்லாம் பிரிக்சில் விவாதிக்க மாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X