கூடலுார் : முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 129.75 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4643 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து வினாடிக்கு 208 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதியில் தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காகவும் குடிநீருக்காகவும் 600 கன அடியாக திறக்கப்பட்டிருந்த நீர் நேற்று காலை 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பெரியாறில் 4.8 தேக்கடியில் 4.4 மி.மீ. மழை பதிவானது.
மின் உற்பத்தி அதிகரிப்பு
லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்களில் 63 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.