பிரதமர் மோடிக்கு எதிரான மனு: தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி: குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என, சிறப்பு விசாரணை குழு அறிவித்ததை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி, குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27ல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மோடி, பிரதமர்மோடி, உச்சநீதிமன்றம், குஜராத், கலவர வழக்கு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என, சிறப்பு விசாரணை குழு அறிவித்ததை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி, குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதையடுத்து, குஜராத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.ஆமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த கலவரத்தில், காங்.,கைச் சேர்ந்த, எம்.பி., ஈஷான் ஜாப்ரி உட்பட, 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது, சதி திட்டம் தீட்டியதாக, ஈஷான் ஜாப்ரியின் மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், 'மோடி உட்பட, 63 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை' என, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழு அறிவித்தது.


latest tamil news



இதை எதிர்த்து, ஜாகியா தொடர்ந்த வழக்கை, குஜராத் உயர் நீதிமன்றம், 2017ல் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, 2018 ல் உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., மாதம் 9 ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202209:49:32 IST Report Abuse
பேசும் தமிழன் குஜராத் மக்கள்..... மானம் ரோஷம் மிக்கவர்கள்... அடித்தால் திருப்பி அடிக்க கூடியவர்கள்... தமிழர்களை போல் இழிச்சவாயார்கள் இல்லை..... என்னடா திருப்பி அடித்து விட்டார்களே... எப்போதும் தமிழர்களை போல் அடி வாங்கி கொண்டு தானே இருப்பார்கள் என்று நினைத்தோம்... இவர்கள்... அவர்களை போல் இல்லை... அது தான் பிரச்சினை!!!!
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
24-ஜூன்-202217:54:05 IST Report Abuse
DVRR .....
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202216:41:59 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN குஜராத் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காலம் தொடங்கி மோடி தீவிரவாதிகளின் டார்கெட்டாக இருந்தார் .... இருக்கிறார் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X