வீணாகும் டயர்களால் தோட்டத்தை அழகோவியமாக மாற்றலாம்...!

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
புறச் சூழல்களால் சுற்றுச்சூழல் பாழாகி வரும் நிலையில் மறுசுழற்சி என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். அதற்காக மறுசுழற்சி என்பது ஏதோ பெரிய விஷயம் அது பெரிய பெரிய நிறுவனங்களும் அரசாங்கமும் செய்ய வேண்டிய விஷயம் என்பதில்லை. நாமும் நம் வீட்டில் நாம் உபயோகிக்கும் பொருடகளை இவ்வாறு செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் இப்படி கார், லாரி உள்ளிட்ட கனரக வாகன
டயர், டயர்பூத்தொட்டி, செடிகள், தோட்டம், பூச்செடிகள், வீணாகும்டயர்கள், மாடித்தோட்டம்

tyres, tyresflowerpot, garden, flowerpot, saveenvironment, homedecorations, gardendecorations, homemaintanancetips, homemaintanance, wastetyres

புறச் சூழல்களால் சுற்றுச்சூழல் பாழாகி வரும் நிலையில் மறுசுழற்சி என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். அதற்காக மறுசுழற்சி என்பது ஏதோ பெரிய விஷயம் அது பெரிய பெரிய நிறுவனங்களும் அரசாங்கமும் செய்ய வேண்டிய விஷயம் என்பதில்லை. நாமும் நம் வீட்டில் நாம் உபயோகிக்கும் பொருடகளை இவ்வாறு செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் இப்படி கார், லாரி உள்ளிட்ட கனரக வாகன டயர்களில் செடி வளப்பது என்பது பிரபலமாகி வருகிறது. இதேபோல, பல்வேறு பொருட்களை இப்படி உபயோகிக்கலாம்வீடுகளில் இடவசதி இருந்தால் மட்டுமே செடிகளை வளர்க்க முடியும் என்பதில்லை. மாடி, பால்கனி, வராண்டா போன்ற இடங்களிலும் செடிகளை வளர்க்கலாம். நாகரிக உலகில் அதிகரித்து வரும் மாடித்தோட்டங்கள் இதற்கு உதாரணமாக உள்ளன. இதற்கேற்ப தொட்டிகள், குரோபேக்குகள் விதவிதமாக கிடைக்கின்றன. அதேவேளையில் வீணாகக்கூடிய வாகன டயர்களை கொண்டும் பூச்செடிகளை வளர்க்கலாம். சிறிய முயற்சிதான்; ஆனால் டயர்களை கொண்டு அழகான பெரிய பால்கனி பூத்தொட்டிகளாக மாற்றலாம்.


latest tamil news


டயர் தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது உங்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவது மட்டுமின்றி தோட்டத்துக்கு கூடுதல் அழகை தருகிறது. கலர்புல்லாக இருப்பதால் மனதுக்கு ரிலாக்ஸாகவும் அமைகிறது. வீணாகும் டயர்களை பலரும் தீயிட்டு எரிப்பதால் காற்று மாசடைகிறது. எனவே டயர்களை பூத்தொட்டிகளாக மாற்றிப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் ஓரளவுக்கு தடுக்க முடியும்.


latest tamil news


ஆங்காங்கே ஒருசிலர் ரோட்டோரங்களில் பழைய டயர்களை வைத்து புதினா, துளசி, கற்றாழை போன்ற செடிகளை வளர்க்கின்றனர். ஆனால் டயரை அப்படியே பயன்படுத்தும் போது பிறரின் கவனத்தை ஈர்க்க முடிவதில்லை; சாதாரணமான ஒன்றாக உள்ளது. அதேவேளையில் சிறிது மாற்றம் செய்து அலங்கரித்தாலே போதும். கலர்புல்லாக மாறிவிடும்; நாகரிக தோற்றத்தையும் தருகிறது.


latest tamil news


டயர்களை பூத்தொட்டிகளாக மாற்ற ரிம்லெஸ் டயர்கள், பெயின்ட், கூர்மையான கத்தி அல்லது ரம்பம் இருந்தாலே போதுமானது. உங்களின் கற்பனைத்திறனுக்கு ஏற்ப விதவிதமான டிசைன்களில் பூத்தொட்டிகளை உருவாக்க முடியும். ஒரே டயர் அல்லது நான்கைந்து டயர்களை ஒன்றிணைத்து பெரிய பூத்தொட்டிகளாகவும் உருவாக்கலாம். இந்த டயர் பூத்தொட்டிகளில் சிறிய செண்டுமல்லி, செவ்வந்தி போன்ற பல பூக்கள், புதினா, கொத்தமல்லி இலை போன்ற கீரைகள், தக்காளி, கத்தரிக்காய் உட்பட பலச் செடிகளை எளிதாக வளர்க்கலாம்.


latest tamil news


அதேபோல் பழைய பிளாஸ்டிக் டின்கள், குளிர்ப்பானம் மற்றும் தண்ணீர் கேன்களிலும் சிறிது மாற்றம் செய்து செடிகளை வளர்க்கலாம். கொஞ்சம் நேரமும், நிறைய மனசும் இதற்கு செலவழித்தாலே போது உங்கள் வீட்டை பச்சை பச்சேல் என அழகோவியமாக மாற்றலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X