இன்றைய
மின்தடை ரத்து
ஈரோடு, ஜூன் 24-
ஈரோடு மற்றும் காசிபாளையம் பகுதியில், இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக, மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் அறிவித்திருந்தார்.
ஆனால், இன்று பல்வேறு தேர்வுகள் நடப்பதால், ஈரோடு மற்றும் காசிபாளையம் பகுதியில், இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னிமலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், இன்று அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்படுவதாக, மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மகுடேஸ்வரர்
கோவிலில் பூக்கடை
ரூ.9 லட்சத்துக்கு ஏலம்
கொடுமுடி, ஜூன் 24-
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், பலவகை இனங்களுக்கு ஏலம் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் கோவில் வளாகத்தில் பூக்கடை நடத்தும் உரிமம், 9.13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோவிலில் உடைக்கப்படும் சிதறு தேங்காயை சேகரம் செய்ய, 95 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. பக்தர்களின் முடி காணிக்கையை சேகரம் செய்யும் உரிமம், 24 ஆயிரத்து, 800 ரூபாய்-க்கு ஏலம் போனது.
நியாய விலைக்கடை பொருட்கள் கொள்முதல் மற்றும் தினசரி பூஜைக்கு தேவையான பூ மாலை, பழம், வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கான உரிமமும் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் (பொறுப்பு) சுகுமார், மொடக்குறிச்சி ஆய்வாளர் தேன்மொழி மற்றும் ஏலதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
8 பேருக்கு கொரோனா
ஈரோடு, ஜூன் 24-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று, எட்டு பேருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டது.
மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று முன்தினம் வரை, 31 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று எட்டு பேருக்கு தொற்று உறுதியானது. அதேசமயம் மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது, 36 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.
ஈரோட்டுக்கு 2,296 டன் யூரியா வரத்து
ஈரோடு, ஜூன் 24-
ஈரோடு மாவட்டத்துக்கு, குஜராத்தில் இருந்து ரயில் மூலம், 2,296 டன் யூரியா உரம் வந்தடைந்தது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:
தற்போது மாவட்டத்தில் யூரியா உரம் - 4,859 டன், டி.ஏ.பி., உரம் - 1,845 டன், பொட்டாஷ் - 2,184 டன், காம்ப்ளக்ஸ் உரம் - 29,529 டன், சூப்பர் பாஸ்பேட் - 945 டன் என, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது.
வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்கைள பெற்று பயன்படுத்துவதுடன், மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்படும் உரங்களை மட்டும் பயன்படுத்தலாம். இதனால் உரச்செலவு குறையும். மண் வளம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஷியாம் பிரசாத்
முகர்ஜி நினைவு
தினம் அனுசரிப்பு
தாராபுரம், ஜூன் 24-
பா.ஜ., சார்பில், ஷியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தாராபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே, நடந்த நிகழ்ச்சிக்கு நகர பா.ஜ., தலைவர் செந்தில்தாசன் தலைமை வகித்தார். ஜன சங்க ஸ்தாபகரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்து, மூத்த பா.ஜ., பிரமுகர் தர்மராஜ் பேசினார். நவீன்குமார், கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.