கடம்பூர் மலைப்பாதை பள்ளத்தில், டிராக்டர் பாய்ந்ததில், ஓட்டிச்சென்ற
விவசாயி படுகாயம் அடைந்தார்.
கடம்பூர் அருகே அத்தியூர் புதுாரை சேர்ந்தவர் பெருமாள், 38; டிராக்டரை பழுது பார்க்க சத்தியமங்கலம் ஒர்க் ஷாப்புக்கு புறப்பட்டார். கடம்பூர் மலைப்பாதை வழியாக நேற்று மதியம் சென்றார்.
ஊத்துக்குழி என்ற இடத்தில் நிலைதடுமாறிய டிராக்டர், 30 அடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிராக்டர் டிரெய்லருடன், மரத்தில் மாட்டிக்கொண்டது. பெருமாள் படுகாய் அடைந்தார்.
சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் டிராக்டரிர் சிக்கித் தவித்த பெருமாளை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.