நான்கு கிராம பஞ்., தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்ற திட்டம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
நான்கு கிராம பஞ்.,களில் உள்ள தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், வில்லிபாளையம், பிள்ளைகளத்துார், நல்லுார் மற்றும் இருட்டணை ஆகிய கிராம பஞ்.,களில், தரிசு நிலங்களை விளை நிலங்களாக

நான்கு கிராம பஞ்.,களில் உள்ள தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், வில்லிபாளையம், பிள்ளைகளத்துார், நல்லுார் மற்றும் இருட்டணை ஆகிய கிராம பஞ்.,களில், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில், 15 ஏக்கர் நிலப்பரப்பு வரை, ஒரு தொகுப்பாகவும், 15- முதல், 35 ஏக்கர் வரை வரை, இரண்டாவது தொகுப்பாகவும் ஏற்படுத்தலாம்.
தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்
திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்தாக இருக்க வேண்டும். தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், ஒரு தொகுப்பிற்கு, 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.
பயனாளிகள் அக்கிராம பஞ்.,களில் அல்லது அருகில் உள்ள கிராமத்தில் குடியிருப்போராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள, பரமத்தி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையும், ரகுபதி - 97891 15058, பூபதி - 63819 14472, கதிர்வேல் - 96553 20985, சத்யராஜ் -94890 21383 ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X