எஸ்.பி.கே., பள்ளி மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் சாதனை

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக்., பள்ளி மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக்., பள்ளி மாணவி கோபிகாஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 496 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவர் கோகுல், 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,


திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக்., பள்ளி மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக்., பள்ளி மாணவி கோபிகாஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 496 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவர் கோகுல், 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பூஜாஸ்ரீ, 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் கோபிகாஸ்ரீ, பூஜாஸ்ரீ, பிரவீன்ராஜ் ஆகியோர், நுாற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் கோபிகாஸ்ரீ நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ் 2வில் பள்ளி மாணவி தீப்ஸிகா, 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் இடத்தையும், லத்திகா, பவித்ரா ஆகியோர், 578 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ரித்தீஷ், 573 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். வேதியியலில்,- 2 பேரும், கணினி அறிவியலில், 2 பேரும், பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களில் தலா, ஒருவரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, 16 ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, எஸ்.பி.கே., பள்ளிகளின் தாளாளர் செங்கோடன், சேர்மன் பிரபு, முதல்வர் சம்பூரணம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X