-நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஸ்ரீ இராமச்சந்திரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், மாணவர் ஹேமநாதன், 600க்கு, 568 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவி செளமியா, 525 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பிரியதர்சினி, 518 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஜாய், 500க்கு, 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சாந்தினி, 435 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடமும், காவ்யா, 430 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியரை, தாளாளர் சந்திரசேகர், பள்ளியின் டிரஸ்டி வளர்மதி, மெட்ரிக்., பள்ளி முதல்வர் கல்பனா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.