நாமக்கல் வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து, தி.மு.க., செயற்குழுவில் ஆலோசனை செய்யப்பட்டது. ராசிபுரம் நகர தி.மு.க., சார்பில், செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், முன்னள் எம்.பி., சுந்தரம், நகர செயலாளர் சங்கர், சேர்மன் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முதல்வர் வருகை குறித்தும், வரவேற்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, ராசிபுரம் நகரம், ஒன்றாவது வார்டில், எம்.பி., ராஜேஷ்குமார் கட்சிக் கொடியேற்றினார்.