"காசு இல்லனா பசிக்கலம்மா-ன்னு சொல்லிடுவேன்” - மழலை சொல்லும் பாடம்| Dinamalar

"காசு இல்லனா பசிக்கலம்மா-ன்னு சொல்லிடுவேன்” - மழலை சொல்லும் பாடம்

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (1) | |
குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலை சொல் கேளா தவர் - குறள். அதற்கு ஏற்றார்போல் இணையத்தில் வைரலாகி வரும் துருவிஷா என்ற சிறுமியின் வீடியோ, நெட்டிசன்களின் பாராட்டு மழையை பெற்று வருகிறது. சிறுமி துருவிஷா தனது தாயின் கேள்விகளுக்கு மழலை மொழியில் பதிலளிக்கும் அந்த வீடியோவில், சாப்பிட ஏதும் இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருக்கும் கேரட்டை தரவேண்டும்
Dhruvisha, துருவிஷா, Viral Baby, வைரல் குழந்தை, Viral Child, Trending Video, காசு இல்ல, பசிக்கல மா, Dinamalar, dinamalar News, Dinamalar Dot com, Dinamalar Daily, தினமலர், தினமலர் செய்திகள்,


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலை சொல் கேளா தவர்

- குறள்.


அதற்கு ஏற்றார்போல் இணையத்தில் வைரலாகி வரும் துருவிஷா என்ற சிறுமியின் வீடியோ, நெட்டிசன்களின் பாராட்டு மழையை பெற்று வருகிறது.


சிறுமி துருவிஷா தனது தாயின் கேள்விகளுக்கு மழலை மொழியில் பதிலளிக்கும் அந்த வீடியோவில், சாப்பிட ஏதும் இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருக்கும் கேரட்டை தரவேண்டும் என்கிறது அந்த மழலை.தொடர்ந்து பேசும் சிறுமி, அம்மாகிட்ட காசில்லைன்னா எனக்கு பசிக்கலன்னு சொல்லிடுவேன்.., கொஞ்சம் பசிச்சா கொஞ்சம் சாப்பிடுவேன்.. நிறைய பசிச்சா நிறைய சாப்பிடுவேன் என்று மழலை மாறாமல் கூறும் அந்தக் குழந்தையின் வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு. ஆழ்ந்து பார்த்தால் பெரியவர்களுக்கான செய்தியும் இதில் அடங்கியிருக்கிறது எனலாம்.


சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் சிறுமியைப் பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X