பராகுவே- ஆர்ப்பாட்டமில்லாத இயற்கை சுற்றுலாத் தலம்..!

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
*தென்னமெரிக்க கண்டத்தில் பொலீவியா, பிரேசில், அர்ஜெண்டினா நாடுகளால் சூழப்பட்ட இயற்கை வளமிக்க நாடு பராகுவே.*உலகில் அமைதியான பட்ஜெட் சுற்றுலாத் தலங்களில் முதலிடம் வகிப்பது பராகுவேதான்.*பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடு பராகுவே. பராகுவே பண மதிப்பின் பெயர் பராகுவேயன் குரானி.*அமெரிக்க சுற்றுலா பயணிகள் பராகுவே வந்தால் ஒரு அமெரிக்க டாலருக்கு 6,880 பராகுவேயன் குரானி
பராகுவே, பராகுவே சுற்றுலா செல்ல, இந்தியா-பராகுவே, paraguay, paraguay tour from india, india to paraguay

*தென்னமெரிக்க கண்டத்தில் பொலீவியா, பிரேசில், அர்ஜெண்டினா நாடுகளால் சூழப்பட்ட இயற்கை வளமிக்க நாடு பராகுவே.


*உலகில் அமைதியான பட்ஜெட் சுற்றுலாத் தலங்களில் முதலிடம் வகிப்பது பராகுவேதான்.


latest tamil news


*பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடு பராகுவே. பராகுவே பண மதிப்பின் பெயர் பராகுவேயன் குரானி.


*அமெரிக்க சுற்றுலா பயணிகள் பராகுவே வந்தால் ஒரு அமெரிக்க டாலருக்கு 6,880 பராகுவேயன் குரானி பெற்றுக்கொள்ளலாம். ஒரு குரானிக்கு 87 இந்திய ரூபாய் பெறும். எனவே அந்நாட்டுச் செல்லும் இந்திய சுற்றுலா


latest tamil news


*பயணிகள் வெறும் நூறு ரூபாய்க்கு பராகுவேயின் சொகுசு நட்சத்திர விடுதியில் ஒருநாள் தங்கிக்கொள்ளலாம்..!


*பராகுவேயின் மொத்த மக்கள் தொகை 70 லட்சம். எண்பது சதவீத நிலப்பரப்பு அந்நாட்டின் 160 செல்வந்தர்களால்


*கட்டுப்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதத்தில் விவசாயம் செய்யும் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு சோயா உற்பத்தி செய்கின்றனர். உலகளவில் சோயா உற்பத்தியில் 6ம் இடம் வகிக்கும் நாடு பராகுவே.


*அதீத உஷ்ணம் கொண்ட பராகுவே நாட்டில் பெரும்பாலும் காற்றோட்டமான வீடுகளே கட்டப்படும். ஏழை மக்கள் பலர் கதவு, ஜன்னல் இன்றி வீடு கட்டி வாழ்கின்றனர்.


latest tamil news*நட்புக்கும், சக உறவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடு பராகுவே. இந்நாட்டில் நேரம் தவறாமை

என்ற ஒன்று கிடையவே கிடையாது. பணிக்கு தாமதமாக வந்தாலும் மேலதிகாரிகள் கட்டுகொள்ளமாட்டர்.

இதனால் வேலைகள் தாமதமாவதை இந்நாட்டு அரசே பொருட்படுத்துவதில்லை.


*பராகுவே நாட்டைச் சுற்றி கடற்பகுதி கிடையாது என்றபோதும் இந்நாட்டுகென தனி கப்பற்படை உண்டு.


*உலகில் அதிகமாக கஞ்சா பயிரிடப்பட்டு சட்டவிரோதமாக கடத்தப்படும் நாடு பராகுவே. பாலியல் தொழில்,

கஞ்சா கடத்தல் ஆகிய இரண்டும் இந்நாட்டின் கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.


*மாகா, காங்கோ கிரே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரிய பறவை இனங்களில் வசிப்பிடமாகத் திழ்வது

பராகுவே.


*மண்டே அருவி, இடை பூ பாலம், ஃபிரெண்ட்ஷிப் பாலம், இண்டிபெண்டென்ஸ் ஹவுஸ் அருங்காட்சியகம்,

இகாசு அருவி உள்ளிட முக்கிய சுற்றுலாத் தலங்கள் பராகுவே சுற்றுலாவில் தவறாமல் காணவேண்டிய இடங்கள்.


*மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து பராகுவே தலைநகர் அசுன்சியான் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமானங்கள் உள்ளன. டிக்கெட் கட்டணம் நபர் ஒருவருக்கு 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவர் பராகுவே சென்றுவர விமான டிக்கெட்டுக்கு இரண்டு லட்சம் செலவாகும். அதேசமயத்தில் அங்கு சென்றுவிட்டால் நீங்கள் தங்கும் விடுதி கட்டணம், கேப் கட்டணம், உணவு, ஷாப்பிங் என அனைத்தையும் அதிகபட்சம் 10-15 ஆயிரத்துக்குள் முடித்துவிடலாம்..!


*எனவே உங்களிடம் இரண்டேகால் லட்சம் பணம் இருந்தால் ஐந்து நாள் பராகுவே டிரிப் சென்று இயற்கை

தலங்களைக் காண்பது மட்டுமின்றி வாழ்க்கையில் எதை நோக்கியும் ஓடாத அமைதியான எளிய மக்களின்

வாழ்வைக் கண்டு புதிய அனுபவத்தைப் பெற்றுவரலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanthakumar.V - chennai,இந்தியா
25-ஜூன்-202200:44:30 IST Report Abuse
Nanthakumar.V ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X