‛‛ஐபி''க்கு புதிய தலைவர் நியமனம்; ‛‛ரா'' தலைவர் பதவி நீட்டிப்பு

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: ஐ.பி., உளவுப்பிரிவு தலைவராக தபன் தேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 'ரா' அமைப்பு தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.'ரா' எனப்படும் வெளிநாட்டு உளவு அமைப்பின் தலைவராக சமந்த் குமார் கோயல் உள்ளார். ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் உள்ளார். இவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30ம் தேதியுடன் முடிகிறது.இந்நிலையில், ஐ.பி.,யில்
Raw, IB, chief, nitiayog, CEO,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஐ.பி., உளவுப்பிரிவு தலைவராக தபன் தேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 'ரா' அமைப்பு தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

'ரா' எனப்படும் வெளிநாட்டு உளவு அமைப்பின் தலைவராக சமந்த் குமார் கோயல் உள்ளார். ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் உள்ளார். இவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், ஐ.பி.,யில் சிறப்பு இயக்குநராக இருக்கும் தபன் குமார் தேகா நியமிக்கப்படுவதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'ரா' வின் தலைவராக உள்ள 1984 ம் ஆண்டு பேட்ச் பஞ்சாப் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான சமந்த் கோயலின் பதவிக்காலம் 2023 ஜூன் 30 வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.


நிடி ஆயோக்கின் சிஇஓ


latest tamil news


நிடி ஆயோக் அமைப்பின் சி.இ.ஓ., ஆக இருந்த அமிதாப் காந்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அந்த பதவிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பரமேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202205:59:39 IST Report Abuse
Mani . V சோ, 130 கோடி பேர் இருக்கும் இந்தியாவில், சமந்த் குமார் கோயலை விட ஒருவருக்கு கூட அந்த பதவியை நிர்வகிக்கும் திறமை இல்லை என்பதுதானே இந்த பதவி நீட்டிப்பின் அர்த்தம்.
Rate this:
Cancel
24-ஜூன்-202219:03:58 IST Report Abuse
அப்புசாமி இவருக்கு பதவி நீட்டிப்பா... இவரை ஒரு அக்னி வீரர்னு நினைச்சேனே...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-ஜூன்-202218:51:27 IST Report Abuse
jayvee காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இனி கதற ஆரம்பித்துவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X