கேரளாவில் ராகுல் எம்.பி., தொகுதி அலுவலகம் மீது தாக்குதல்

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு தொகுதி காங்., எம்.பி. ராகுல் அலுவலகம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் உள்ளார். இன்று இவரது கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். . இதுபற்றி காங்., டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எப்.ஐ.) சேர்ந்த சிலர் கொடிகளை ஏந்தியபடி அலுவலகம்
 கேரளா,  ராகுல் எம்.பி.,  தொகுதி , அலுவலகம் , தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு தொகுதி காங்., எம்.பி. ராகுல் அலுவலகம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் உள்ளார். இன்று இவரது கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். . இதுபற்றி காங்., டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எப்.ஐ.) சேர்ந்த சிலர் கொடிகளை ஏந்தியபடி அலுவலகம் நோக்கி வந்தனர்.


latest tamil news



திடீரென அலுவலகத்திற்குள் அத்துமீறி சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகிய பொருட்களை அடித்து நொறுக்கினர். அலுவலக ஊழியர்கள் சிலரையும் தாக்கினர். இதில் ஊழியர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பகுதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து தொகுதி எம்.பி.என்ற முறையில் ராகுல் எந்த எதிர்ப்பையும் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தின் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202207:01:04 IST Report Abuse
Rajan தொகுதி எம்.பி. வசிப்பது தில்லியில் மகாராஜா பங்களாவில். அவ்வப்போது வெளிநாடு போய்விடுவார். தொகுதியில் தங்கி மக்கள் சேவை செய்யாமல் மோதியை வசை பாட தில்லி எதற்கு?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202221:58:01 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இதை கண்டிக்க எந்த மூர்க்கனும் முன்வரலையே ?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202221:57:29 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஆளும் கட்சியின் வேலை ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X