சாலை பிரியும் இடத்தில் தடுமாற்றம் அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை| Dinamalar

சாலை பிரியும் இடத்தில் தடுமாற்றம் அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

Added : ஜூன் 24, 2022 | |
பொன்னேரி:ஒருவழி சாலை முடிந்து, இருவழி சாலை துவங்கும் இடத்தில், வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் பகுதியில் இருந்து, பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி, ஏலியம்பேடு வழியாக புதுவாயல் செல்லும் மாநில சாலை உள்ளது.சின்னகாவணத்தில் இருந்து, ஏலியம்பேடு மகேந்திரா சிட்டி வரை, ஒருவழி சாலையாகவும், அங்கிருந்து புதுவாயல்
சாலை பிரியும் இடத்தில் தடுமாற்றம் அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

பொன்னேரி:ஒருவழி சாலை முடிந்து, இருவழி சாலை துவங்கும் இடத்தில், வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் பகுதியில் இருந்து, பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி, ஏலியம்பேடு வழியாக புதுவாயல் செல்லும் மாநில சாலை உள்ளது.சின்னகாவணத்தில் இருந்து, ஏலியம்பேடு மகேந்திரா சிட்டி வரை, ஒருவழி சாலையாகவும், அங்கிருந்து புதுவாயல் வரை மீடியனுடன் கூடிய இருவழி சாலையாகவும் இது உள்ளது.
ஒருவழி சாலை முடிந்து, இருவழி சாலை துவங்கும் இடத்தில், வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்கின்றன. வழக்கமாக இந்த சாலையில் பயணிப்போர், இதை அறிந்து பயணிக்கின்றனர். புதிதாக பயணிப்போர், ஒருவழி சாலையில் இருந்து, இருவழி சாலைக்கு செல்லும்போது தடுமாற்றம் அடைந்து, மீடியனில் உரசியபடி பயணிக்கின்றனர்.
இரவு நேரங்களில், இரு சாலையும் இணையும் இந்த பகுதியில், வாகனங்கள் மீடியனில் மோதி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேற்கண்ட பகுதியில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் இருவழி துவங்குவது குறித்து அறிவிப்பு பலகை வைக்கவும், ஒருவழி சாலையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X