உண்டியல் வசூல் ரூ.91 லட்சம்

Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
நகரி:சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலுக்கு, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பணம், தங்கம், வெள்ளி காசுகளை உண்டியலில்

நகரி:சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலுக்கு, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பணம், தங்கம், வெள்ளி காசுகளை உண்டியலில் செலுத்துகின்றனர்.கடந்த, 17 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு, கோவில் சேர்மன் மோகன்ரெட்டி ஆகியோர் முன்னிலையில் ஊழியர்களால் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், 91.78 லட்சம் ரூபாய், 130 கிராம் தங்கம், 1,300 கிராம் வெள்ளி, 959 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X