கார்த்தியின் 'விசா' ஊழல் : ஜூலை 12 வரை நிம்மதி

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :'விசா' ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி மீது, அடுத்த மாதம் 12ம் தேதி வரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.பணப் பரிமாற்றம்காங்., மூத்த தலைவரான சிதம்பரம், 2011ல் மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த
கார்த்தி ,விசா, ஊழல், ஜூலை 12

புதுடில்லி :'விசா' ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி மீது, அடுத்த மாதம் 12ம் தேதி வரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


பணப் பரிமாற்றம்



காங்., மூத்த தலைவரான சிதம்பரம், 2011ல் மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு, சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news




சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி, தன் தந்தையின் உதவியுடன் இந்த விசாவை பெற்றுத் தந்ததாகவும், இதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ., தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.இதில் நடந்துள்ள சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, கார்த்தி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, கார்த்தி உள்ளிட்டோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.இதன் மீதான விசாரணை, நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் இன்று (ஜூன் 24) நடந்தது.


நடவடிக்கை



அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு கூறுகையில், ''இந்த வழக்கில், அடுத்த மாதம் ௧௨ம் தேதி வரை, கார்த்தி மீது கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது,'' என, வாய்மொழியாக உறுதியளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அடுத்த விசாரணையின் போது, இந்த வழக்கில் தற்போது வரை உள்ள நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202208:00:45 IST Report Abuse
Kasimani Baskaran வேண்டுமானால் அதற்குள் வெளிநாட்டுக்கு தப்பிவிடலாம் என்ற யோசனையை சொல்வது போல இருக்கிறது... எப்படியோ நல்லது நடந்தால் பாராட்டலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202206:06:47 IST Report Abuse
Mani . V இந்த தடையை கார்த்தியின் 85 ஆவது வயது வரை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியுமா? என்று பரிசீலிக்கவும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஜூன்-202205:50:39 IST Report Abuse
Girija அமலாக்கத்துறை சிதம்பரம் குடும்ப வழக்குகளில் மட்டும் "கஞ்சா காஞ்சனா வடிவேலு மாதிரி ஆகிவிடுகிறது" .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X