பன்னீர்செல்வம் செல்வாக்கு வீழ்ந்தது ஏன்?

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
அ.தி.மு.க.,வில், தலைமை பதவியில் இருந்த பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு, இந்தளவுக்கு வீழ்ந்தது ஏன் என்ற விவாதம், அக்கட்சி வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்மயுத்தத்திற்கு ஆதரவாக திரண்ட தொண்டர்களை கண்டுகொள்ளாமல் விட்டதுடன், அந்த சசிகலாவிடமே மீண்டும் நெருக்கம் காட்டியதும், குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை காட்டியதும் தான், அவரது
பன்னீர்செல்வம் செல்வாக்கு, வீழ்ந்தது ஏன்?

அ.தி.மு.க.,வில், தலைமை பதவியில் இருந்த பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு, இந்தளவுக்கு வீழ்ந்தது ஏன் என்ற விவாதம், அக்கட்சி வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்மயுத்தத்திற்கு ஆதரவாக திரண்ட தொண்டர்களை கண்டுகொள்ளாமல் விட்டதுடன், அந்த சசிகலாவிடமே மீண்டும் நெருக்கம் காட்டியதும், குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை காட்டியதும் தான், அவரது சரிவுக்கு காரணம் என, கட்சியினர் சரமாரியாக புகார் கூறுகின்றனர். அ.தி.மு.க.,வில், ஒற்றை தலைமை முடிவுக்கு, 99 சதவீதம் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரட்டை தலைமை பதவி காலாவதியாகி விட்டதாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


கட்சியில் இருந்து, பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற கோஷத்தை, மாவட்ட வாரியாக, பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, மாவட்ட செயலர்களோ, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களோ திரண்டு வராதது ஏன்? இந்தளவுக்கு, கட்சியிலும் ஒற்றை தலைமை விவகாரத்திலும், பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டு உள்ள வீழ்ச்சிக்கு என்ன காரணம்?


தர்மயுத்தம்அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த பன்னீர்செல்வத்தை, அவர் இரண்டு முறை முதல்வராக்கினார். ஜெயலலிதா மறைவுக்கு பின், மூன்றாவது முறை முதல்வராகவும், துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இப்போது, அதே கட்சியில் ஓரம் கட்டப்பட்டு உள்ளார்.இதற்கு காரணம், அவர் தம்பி, மகன்கள், உறவினர்கள் என, குடும்ப உயர்வுக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது தான். தன்னை நம்பியுள்ள ஆதரவாளர்களுக்கு, அரசியல் ரீதியாக முக்கிய பதவிகளையும், பொருளாதார ரீதியாக, அரசு ஒப்பந்த பணிகளையும் வழங்காமல், அவர்களின் முன்னேற்றத்திற்கு, அக்கறை காட்டாமல் தவிர்த்தார். தன்னிடம் இருந்த விசுவாசமான உதவியாளர்களை கூட, வாரிசுகளின் பேச்சை கேட்டு, இடம் மாற்றி விட்டார். அதனால், அவரை சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டு விட்டதும், அதை மீறி அவரை அணுக முடியாதபடியும் செய்யப்பட்டது. அதனால், கட்சிக்குள்ளும், வெளியிலும் என்ன நடக்கிறது என்பது மறைக்கப்பட்டு விட்டது.
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் துவக்கியபோது, தொண்டர்கள் அவருக்கு ஏகோபித்த ஆதரவு அளித்தனர்.


மறைமுக பேச்சுஆனால், யாரை எதிர்த்து யுத்தம் நடத்தினாரோ, அதை மறந்து, அவரது தம்பி ராஜா, திருமண விழாவில் தினகரனை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு மட்டுமின்றி, பன்னீர்செல்வமும், தினகரனுடன் ரகசியமாக பேசிய தகவலும் தான், தொண்டர்களின் சந்தேகத்திற்குரிய தலைவராக, அவரை அடையாளம் காட்டியது.பிரதமர் கேட்டதற்காக தான் துணை முதல்வர் பதவியை ஏற்றதாக, உள்விவகாரங்களை வெளிப்படுத்தியதும், சசிகலாவை சேர்ப்பதற்கு, டில்லியில் மறைமுக பேச்சு நடத்தியதும், அவரின் சரிவுக்கு காரணங்கள்.அதை விட முக்கியமாக, எதற்காக ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் கேட்டாரோ, அதே கமிஷனில் அடித்த, 'பல்டி' அவரை வெகுவாக வீழ்த்தியது. சசிகலா மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அவர் மீதான சந்தேகத்தை போக்கவே விசாரணை கேட்டதாகவும், அவர் கூறிய சாட்சியம், தர்மயுத்தத்தை ஆதரித்த அனைவரையும் அதிர வைத்தது.அதன் காரணமாகவே, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என, எதுவும் அவருக்கு கைகூடவில்லை.

அதற்கு அவர் விட்டுக் கொடுத்தது தான் காரணம் என்பதல்ல; உண்மையில் அந்த பதவிகள், அவரை விட்டு விலகும் வகையில் செல்வாக்கை இழந்து விட்டார் என்பதே நிதர்சனம். லோக்சபா தேர்தலில், தன் மகன் ரவீந்திரநாத் வெற்றிக்காக, தேனி தொகுதியில் மட்டும் முகாமிட்டு செலவு செய்தார். வாரிசுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அதுவே, அவரது குடும்பத்திற்குள் பிரச்னையாகவும் வெடித்தது. மூத்த மகனுக்கு எம்.பி., பதவி கிடைத்து விட்டதால், இளைய மகனுக்கு வருத்தம்.அவரை எம்.எல்.ஏ.,வாக்க, பன்னீர்செல்வம் விரும்பினார். அதற்காக, ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தன்னை நிறுத்தும்படி, பழனிசாமியிடம் கேட்டார். அதன் வாயிலாக, காலியாகும் சட்டசபை தொகுதியில், தன் இளைய மகனை நிறுத்தலாம் என திட்டமிட்டார்.

இப்படி, குடும்பத்தினர் நலனுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்தார். ஆதரவு வேட்பாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் கூட செலவு செய்ய மறுத்தார்; சட்டசபை தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு 'சீட்' வாங்கி தராமல் ஒதுங்கினார்; மாவட்ட செயலர் நியமனத்தில் ஆதரவாளர்களை மறந்தார் என பல நடவடிக்கைகள், பன்னீர்செல்வத்தின் பின்னடைவுக்கு காரணங்களாக பட்டிலிடப்படுகின்றன.சட்டசபையில், தி.மு.க.,வை தீவிரமாக எதிர்க்க தயங்கியதுடன், 'கருணாநிதி வசனத்தை மனப்பாடம் செய்து படிப்பேன்' என பன்னீர்செல்வம் பேசியதும் சர்ச்சையானது. அதை கூட ஏற்கலாம். ஆனால், தன் மகன் ரவீந்திரநாத்தை அனுப்பி, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்தது தான், அவருக்கு மிகப் பெரிய சறுக்கலை தந்தது. ஜெயலலிதா இருந்திருந்தால், இதெல்லாம் நடந்திருக்குமா என தொண்டர்களை பேச வைத்து விட்டது.இதுபோன்ற பன்னீர்செல்வத்தின் பல நடவடிக்கைகள், அ.தி.மு.க.,வினரால் ரசிக்கப்படவில்லை. அதேநேரத்தில், பழனிசாமியின் கை ஓங்குவதற்கு, அவை உதவிகரமாக அமைந்து விட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுக்குழுவில் ரத்தான தீர்மானங்கள்!


அ.தி.மு.க.,வில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆகியோருக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானமும், பொதுக்குழுவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியானது. கூட்டம் துவங்கியதும், தீர்மானங்கள் அனைத்தையும் பொதுக்குழு நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் உட்பட, கட்சியின் அனைத்து நிலைகளுக்குமான நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல், அங்கீகாரம், வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம் முக்கியமானது.அதேபோல், தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் போன்றவையும் இடம் பெற்றிருந்தன. தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கட்சி தேர்தல் வழியாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் செயல்பட முடியுமா, முடியாதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-ஜூன்-202220:30:39 IST Report Abuse
Ramesh Sargam சசிகலாவிடம் நெருக்கமாக இருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல சிக்கல்களை எதிர்கொண்டார். தெரிந்தும் இந்த OPS சசிகலாவிடம் உறவு பாராட்டுவது சரியல்ல. விதி அப்படித்தான் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Cancel
mahendran - trichy,இந்தியா
25-ஜூன்-202218:29:59 IST Report Abuse
mahendran Ops has the support of party cadres. For the unity of party he played a second fiddle to EPS and accepted all humiliation. After the GC meeting his image is now high.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
25-ஜூன்-202215:54:44 IST Report Abuse
ramesh ஜெயலலிதா பதவி இழந்த பொது கேவிக்கேவி அழுது நடித்துவிட்டு அவர் இறந்த பிறகு ஒருவர் கூட அழவில்லை என்பதை கண்கூடாக பார்த்தோம் .இவர்கள் எல்லாம் பணம் பதவிக்காக மட்டுமே ஜெயலலிதா மற்றும் சசிகலா காலில் விழுந்தவர்கள் என்பதை நாடு அறியும் .பதவிகிடைத்தவுடன் ஏறிவந்த ஏணியாகிய சசிகலாவின் முதுகை குத்தியவர் தானே இந்த எடப்பாடி. .இப்படிப்பட்ட சந்தர்ப்ப வாதிகளிடம் இதைவிட பெரிதாக எதை எதிர் பார்க்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X